search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி கோவிந்த்"

    பூட்டான் நாட்டின் ராஜமாதாவும் தற்போதைய மன்னரின் தாயாருமான டோர்ஜி வாங்மோ இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். #BhutanQueenMother #PresidentKovind
    புதுடெல்லி:

    பூட்டான் நாட்டின் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகளை ஜிக்மே சிங்யே வாங்சுக் திருமணம் செய்து கொண்டார்.

    1972-ம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மன்னராக இருந்த இவர் தனது மூத்த மகனான ஜிக்மே கேஷர் நாம்கியெல் வாங்சுக் பதவிக்கு வர வேண்டும் என விரும்பி கடந்த 2006-ம் ஆண்டில் மன்னர் பதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், பூட்டானின் அண்டைநாடான இந்தியாவுடன் அந்நாட்டுக்கு உள்ள 25 ஆண்டுகால நட்புறவை விளக்கும் வகையில் இந்தியாவில் ‘பூட்டான் வாரம்’ கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தை இந்திய மக்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் பூட்டான் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக பூட்டான் நாட்டின் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்-கின் முதல் மனைவியும், தற்போதைய மன்னரின் தாயாரும், அந்நாட்டின் ராஜமாதாவுமான கியாலியும் டோர்ஜி வாங்மோ வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். #BhutanQueenMother #PresidentKovind
    இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி, “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்” என அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #HBDRajaSir #Ilayaraaja75
    புதுடெல்லி:

    இசை உலகின் தலைசிறந்த கலைஞரான இசைஞானி இளையராஜா இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி இசை ரசிகர்கள் பலரும் அவருக்கு புகழ்மாலை சூட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற  பெரும்பேறாகக் கருதுகிறேன் - குடியரசுத்   தலைவர் கோவிந்த்.” என அவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் இளையராஜாவுக்கு தான் வழங்கிய பத்ம விபூஷண் விருது கொடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஜனாதிபதி இணைத்து பதிவிட்டுள்ளார்.
    ×